தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் நளின் ஹெவகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல்வேறு நலன் திட்டங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவிற்கு கொடுப்பனவு தொகை வழங்குதல், அஸ்வெசும கொடுப்பனவு தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நலன் திட்டங்கள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் மூலம் மக்களுக்கான நலன் திட்டங்களை மேலும் அதிகரிக்க முடியும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படக் கூடிய நலன் திட்டங்கள் தொடர்பில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
