துயரத்தில் ஆழ்த்திய எல்ல விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய இராணுவ வீரர் கௌரவிப்பு!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது.

இந்தப் பாராட்டு நிகழ்ச்சி வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இராணுவ வீரரின் தாயார், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி மற்றும் வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ. நிஹால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது, இராணுவ வீரருக்கு நினைவுச் சின்னமும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.

16 பேரின் உயிரைப் பறித்த எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த பேருந்து விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்தனர்.

தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜீப்பில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்போது, பேருந்தில் இருந்த குழுவை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், அவர்களில் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டாராவும் அடங்குவார்.

இந்நிலையில், அவர் இப்போது ஓரளவு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!