தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல அரசு இணையதளங்கள் செயலிழந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமைச்சின் தகவல்படி, அரச கிளவுட் அமைப்பு அதன் திறனை மீறியதால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை காவல்துறை, பதிவாளர் நாயகம் திணைக்களம் , மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் வானிலை ஆய்வு திணைக்களம் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.
அமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதுவரை, பாதிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் நிகழ்நிலை சேவைகளை பெற முடியாது.
எவ்வாறாயினும், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் பெறலாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.