உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனை தற்போது சீனா உறுதி செய்துள்ள நிலையில் அங்கு 1,000 தொன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கம் என்பது டிஜிட்டல் மொடலிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹுனானில் ஏற்கனவே இருக்கும் வாங்க் தங்க சுரங்கத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

இந்த தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டொலர் என்று தெரிவிக்கப்படுவதுடன் அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 தொன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்துள்ளது.

சீனா ஏற்கனவே உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ள நிலையில், முதற்கட்ட ஆய்வின்படி ஒரு டன் தாதுவில் 138 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த தங்க புதையல் குறித்து பல நாடுகள் ஆச்சரியாக பார்க்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்கின்றன.

ஒரே இடத்தில் 1,000 தொன் தங்கம் கிடைப்பது சாத்தியமில்லை எனவும் சீனா இந்த விஷயத்தில் பொய் சொல்லலாம் என்று அமெரிக்கா தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
Driver's license
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்
Annapoorani Amma
யாழ் வர இருக்கும் அன்னபூரணி, அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை!
N836MH
நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
port city colombo
கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு!
Ravi Mohan with new projects in Sri Lanka
இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்