🔴 VIDEO சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! நெதன்யாகு கொடுத்த எச்சரிக்கை.!

இஸ்ரேல் தனது அண்டைய நாடான சிரியாவில் வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கு மத்தியில், இஸ்ரேலிய இராணுவம் சிரியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள HTS தலைமையிலான சிரிய இராணுவத்தின் தலைமையகம் மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை (IDF) எக்ஸ் பக்கத்தில், ஒரு பதிவில் சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவ தலைமையகத்தின் நுழைவு வாயிலைத் தாக்கியதாகக் கூறியது. தெற்கு சிரியாவில் ட்ரூஸ் குடிமக்களுக்கு எதிரான ஆட்சியின் முன்னேற்றங்களையும் நடவடிக்கையையும் தற்போது கண்காணித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தெற்கு சிரியாவில் ட்ரூஸ் ஆதிக்கம் செலுத்தும் நகரமான ஸ்வீடாவில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் நடந்துள்ளன, அங்கு அரசாங்கப் படைகளுக்கும் உள்ளூர் ட்ரூஸ் பிரிவுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முறிந்துள்ளது. ட்ரூஸ் சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது.

தற்போது, சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு