பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் கடந்த 28 ஆம் திகதி அன்று இடம்பெற்ற Mister Glam International மாடலிங் போட்டியில், யாழ்ப்பாணம் ஆவரங்காலைச் சேர்ந்த இளைஞரான ஹரன் ரமின்ஷன்,TOP 10 தரவரிசைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார்.

35 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பலவிதமான போட்டிகளின் மத்தியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
இது, யாழ் மண்ணுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, இலங்கை இளைஞர்களின் திறமையை உலகரங்கில் எடுத்துக்காடடி ய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.
அவரது வெற்றிக்கு பலரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

