1990 ஹஜ் பயணிகள் படுகொலை: குருக்கள்மடம் மனிதப்புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றம் அதிரடி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று ( 17 ) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் , மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடம் பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

இப் புதை குழி எதிர்வரும் 30 ம் திகதி அகழ்வாய்வுக்கு உட்படுத்த மன்று அறிவித்துள்ள நிலையில் , இந்த விசேட கள விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!