யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, ஐ.டி.எம். கேம்ப்ஸ் (IDM Campus) நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. வி. ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு 29.09.2026 (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகத் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளியை எதிர்மனுதாரரான ஜனகன் விநாயகமூர்த்தி நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசமான அணுகுமுறையை ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சைவ சமய அடையாளங்களைப் பள்ளி வளாகத்திலிருந்து அழித்து அகற்றுகின்றார்; அவர் மத நம்பிக்கையற்றவர்; பாடசாலையின் பாரம்பரியத்தை நிராகரிக்கின்றார்” என்று குற்றம்சாட்டி ஜனகன் விநாயகமூர்த்தியினால் முகநூலில் காணொளியொன்று வெளியிடப்பட்டிருந்தது. இக்காணொளியை உடனடியாக நீக்குமாறும், இது தொடர்பாக அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற காணொளிகளை வெளியிடமாட்டேன் என உத்தரவாதம் அளிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிபந்தனைக் கட்டளை பிறப்பித்திருந்தது.

29.09.2026 அன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் நேரில் முன்னிலையான ஜனகன் விநாயகமூர்த்தி, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி அக்காணொளியை ஏற்கனவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், காரணங்காட்டுவதற்காக அவகாசம் கோரிய அவர், அதிபரிடம் மன்னிப்புக் கோருவது உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பும் ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இரு தரப்பின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான், சமரச முயற்சியை மேற்கொள்வதற்காக வழக்கை ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறன் சார்பாக மூத்த சட்டத்தரணிகளான திரு. வி. திருக்குமரன், கலாநிதி கு. குருபரன் ஆகியோருடன் மேலும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். திரு. வி.ஜனகன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர மற்றும் திரு. என். கே. அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். மேலும், அடுத்த வழக்கு விசாரணையின்போது திரு. வி.ஜனகன் சார்பில் முன்னாள் அமைச்சரும் சனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா முன்னிலையாவாரென தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!