கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்து இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (25) விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த இளைஞர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு