தொடரும் போராட்டம்! களத்திற்கு சென்ற அரசியல்வாதிகள்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று ஆறாம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலிக்காமல் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மத குருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.

ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கம் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்