கண்டி – வத்தேகமவில் சோகம்: 4 வயதுக் குழந்தையை வீதியில் கைவிட்டுத் தப்பிய தாய்!

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை