மாணவி தவறி விழுந்ததாக குற்றச்சாட்டு: கண்டி சாலை பேருந்து சாரதி மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை!

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

பனிக்கன்குளம், கிளவன்குளம், திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த பின்னர் பேருந்துக்காகக் காத்திருந்த நிலையில், ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாணவர்களை ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், பேருந்தில் ஏறிய மாணவி ஒருவர் தவறி விழ நேரிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பேருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் கண்டி சாலைக்குரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சாரதியை தற்காலிகமாகப் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பயணிகளுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!