வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் : பலர் படுகாயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சுற்றுவட்டத்தில் உள்ள டெஸ்போட் வட்ட பகுதியில் இன்று (10) அதிகாலை 5:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வானின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வான் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!