கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கொடும்பாவி எரிப்பு!

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மீதும் ஏனைய கமக்காரர் அமைப்புக்கள் மீதும் ஊழல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரிடம் மகஜர் கையளிக்கும் நோக்குடனும் விவசாயிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன 28 அமைப்புக்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காக்கா கடைச்சந்தியிலிருந்து ஆரம்பித்த போராட்டமானது பேரணியாக மாவட்ட செயலகம் வரை வந்து மாவட்ட அரசாங்கதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.

அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் விவசாய அமைப்புக்கு எதிராக செயற்படும் இருவரின் கொடும்பாவிகளும் விவசாயிகளினால் எரிக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்