நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்: நாளை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு!

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறி வித்துள்ளார்

அதேநேரம் எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) கொழும்பு நிரந்தர நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!