வர்த்தகர்களுக்கான எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஒரு வியாபார நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும், அந்த நிறுவனத்தின் பெயரிலேயே எரிபொருள் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வியாபார நிறுவனங்கள் தமது நிறுவனப் பதிவு இலக்கம் (BRN) மற்றும் ஒரு கைப்பேசி இலக்கத்தை மாத்திரம் பயன்படுத்தி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு தேசிய அடையாள அட்டை (NIC) அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வணிக நிறுவனத்தின் கீழ் இயங்கும் எத்தனை வாகனங்களாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் அந்த நிறுவனத்தின் பெயரிலான ஒரே கணக்கின் (Single Profile) கீழ் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டுடன் கூடிய QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல வாகனங்களை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்களுக்குப் பெரும் சுமை குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் QR குறியீட்டு முறைமையின் கீழ் இதுவரை சுமார் 6.4 மில்லியன் பயனாளர்கள் இக்கட்டமைப்பில் இணைந்துள்ளனர்.

இதில் 2.8 மில்லியன் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்னும் சுமார் 100,000 பயனாளர்கள் மாத்திரமே இக்கட்டமைப்பில் இணைய வேண்டியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதோடு, வர்த்தகத் துறையினருக்குத் தடையற்ற சேவையை வழங்க உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்