சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

பமுணுகம, சேதவத்த பகுதியில் இரண்டு சகோதரரல்களுக்கிடையிலான நீண்டநாள் பகையில் சகோதரரால் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கம்புருகமுவ, ஊதுடல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனது மூத்த சகோதரருடன் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு முற்றியதன் காரணமாக, அவராலேயே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!