கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை, சுத்தப்படுத்துவதற்கு, தலா 10,000 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
அத்துடன், பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள பிரதேச செயலகங்களில் வழமையான சேவைகளைப் பெறுவோர் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை ஏனைய பிரதேச செயலகங்களில், தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார கோரிக்கை விடுத்துள்ளார்.
