பளையில் புலிகளின் முகாம் வதந்தி: பொலிஸ் விசாரணையில் வெளியான உண்மை

பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களை பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக வௌிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, குறித்த காணொளிக்கு அமைய, அந்த இடமானது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கண்ணகிபுரம் மேற்கு, முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பளை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டை அழித்து 3 மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் முகாம் எனவும், இங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் சந்தேகநபர் காணொளியில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அடிப்படையற்ற மற்றும் போலியானது என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த இடத்தை மையமாகக் கொண்டு வெடிபொருட்கள் உற்பத்தி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி அல்லது குண்டு தயாரிப்பு இடம்பெறுவதாக விசாரணைகளில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என பொலிஸார் குறித்த அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர்.

மேலும், விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்பு அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி நிலையமாக அந்த இடம் பராமரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களை வௌியிட்ட பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

பின்னர் அவர் நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்