ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
ஆந்திரப் பிரதேசத்தில் புதுமணத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு சோகத்திலும் அதிர்ச்சியிலும் முடிந்துள்ளது. கணவன்–மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சிரஞ்சீவி (30), சில மாதங்களுக்கு முன்பு கீதாலா (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கடி இருவருக்கும் சண்டைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தபோது, “ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்” என அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த கீதாலா, கணவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்:
“நான் சாகப் போறேன்… இப்போ உனக்கு சந்தோசமா?”
இதற்கு சிரஞ்சீவி பதிலளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:
“எனக்கு ரொம்ப சந்தோசம்!”
கணவரின் இந்த பதிலால் மனம் தளர்ந்த கீதாலா, தன் வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிரஞ்சீவி, மனைவி தூக்கில் தொங்குவது கண்டு கதறி அழுதுள்ளார். “என் மனைவியின் சாவிற்கு நான்தான் காரணம்” என குற்ற உணர்வில் வாடிய அவர், அதே கயிற்றில் தானும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரட்டை தற்கொலை சம்பவம் அந்தப் பகுதியில் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.