வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்

சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்தொன்று தொடர்பாகப் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் சீதுவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குள் வைத்து இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் கொஸ்தாபல் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!