முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது உடல் நிலை சற்று அசௌகரியமான நிலையில் இருப்பதாகக் குடும்ப வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

ஷிரந்தி ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.

எப்படியிருப்பினும், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் எழுத்துமூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ இலஞ்ச ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!