மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜன்: கருணை காட்டுமாறு சவூதி அரேபிய மன்னரிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சஊதுக்கு அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளனர்.

சிவராசா அனோஜன் செய்த தவறை தாங்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள தலைவர்கள், அவர் அறியாமையினாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்திலோ சமூக வலைத்தளத்தில் தவறான கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அனோஜன் தனது தவறை உடனடியாக உணர்ந்து அதற்காக உண்மையாக மன்னிப்புக் கோரியுள்ளமையையும், தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றமையையும் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாம் மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் உயர் பண்புகளாகப் போற்றுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், “பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுபவர்கள் மீது சொர்க்கத்தில் உள்ள (அல்லாஹ்) கருணை காட்டுவான்” என்ற நபிமொழியை நினைவூட்டியுள்ளனர்.

அனோஜனின் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்தினரின் நிலையைக் கருத்திற்கொண்டு, மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு சவூதி மன்னரிடமும் அரசிடமும் அவர்கள் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எவ்.), எம். சந்திரகுமார் (பொதுச்செயலாளர் – சமத்துவக் கட்சி), எஸ். நவீந்திரா (தலைவர் – ஜனநாயகப் போராளிகள் கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!