பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த சிறீதரன் எம்.பி…!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

​இச் சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதோடு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

​அத்துடன், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இருதரப்பிற்கும் இடையில் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இத்தகைய சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது இணக்கம் காணப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.

​இவ் உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!