மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் மலையக மக்களின் காணி உரிமை அற்றவர்கலாக தொடர்ந்தும் வைக்கப்பார்கிறார்கள் என யாழ்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்.

மலையக மக்களின் வரலாறு 200வருடங்களை கடந்துள்ளது அவர்கள் கணடாவிலோ அல்லது பிர்த்தானியாவிலோ வாழ்ந்தாலும் அவர்களுக்கு மூன்று அல்லது ஜந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கப்பெருகிறது ஆனால் இங்கு பத்து பரம்பரைகளை கடந்து வந்த மக்களுக்கு ஒரு துண்டு காணி கூட வழங்கப்படவில்லை அவர்கள் வாழுகின்ற பிரதேசத்தில் ஒரு வீட்டை கட்டி கொள்வதற்கோ அல்லது கழிப்பறை ஒன்றை கட்டி கொள்வதற்கோ தங்களுக்குரிய ஆடுமாடுகளை வளர்த்து கொள்வதற்கான கொட்டைகலை அமைத்து கொள்வதற்கு கூட தோட்ட நிர்வாகத்தின் அனுமதியினை பெறவேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கைவிட காணி பிரச்சினை வாழ்வியல் பிரச்சினை அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கையின்மை என்பது மலையகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது வடக்கு கிழக்கில் உள்ள காணி பிரச்சினை என்பது பாரம்பரியமாக பூர்வீகமாக இருந்த காணிகளை இரானுவம் பிடித்து வைத்திருக்கிறது பலாலி. வசாபுலான் பகுதிகள் 2000ம் ஏக்கர் காணிகள் வழிகாமம் போன்ற பகுதிகளில் இரானுவத்தினரின் வசம் இருக்கிறது. அது பொருளாதார வழம் கூடிய மண் அதில் வெற்றிலை திராட்சை மரக்கரி செய்கைகளுக்கு பெயர் போன ஒரு பிரதேசம் அங்கு வாழுகின்ற மக்கள் உள்நாட்டுகுள்ளே கிட்டதட்ட 30ஆண்டுகள் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் 700ரூபாய் சம்பளமாக இருந்த காலப்பகுயிலும் நாங்கள் பேசியிருந்தோம் ஆனால் 1700ரூபாய் சம்பளம் என்பது ஒரு கண்துடைப்பு செயலாக காணப்படுகிறது ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒரு நாளைக்கு தற்போது உள்ள நிலைமையில் 5000ம் ரூபாய் தேவைப்படுகிறது அவர்களுடைய ஒருநாள் ஊதியம் 1350ரூபாய் என அறிவிக்கப்பட்டாலும் அது கூட சரியாக வழங்குவதில்லை. சம்பளம் என்பதற்கு அற்பால் அவர்களுடைய பொருளாதார இயலுமை என்பது முறையாக கொண்டுவரப்பட வேண்டும் புரோட்டின் போன்ற உணவுகள் மற்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள கூடிய ஒரு வருமாணமாக இந்த சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். என்பதற்கு இலங்கை தமிழரசு கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
கடந்த காலங்களில் இருந்த அரசுகள் பாரிய பேரழிவை இந்த மண்ணில் ஏற்படுத்தி ஊழல் நிறைந்தவர்கலாக தற்போதய வரலாறு கூறுகிறது தற்போது வந்திருப்பவர்கள் 50ஆண்டுகள் அடிமட்ட மக்களிடம் அரசியல் தளத்தை உருவாக்கி அதிலே இருந்துதான் தன்னுடைய அரசியலை உருவாக்கியிருக்கிறார்கள் இவர்களுக்கான சந்தர்ப்பம் என்பது இன்னும் ஓராண்டை கூட கடக்கவில்லை தொடந்தும் தங்களுடைய பரம்பரை பரம்பரையாக வரலாற்று ரீதியாக குடும்பம் மாக அரசியல் செய்து வந்தவர்களில் ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்சம் காலம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது மிக மிக முக்கியம் குறிப்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் செய்த ஊழல் என்பது மனித உயிர்களோடு விளையாடிய விடயம் இவருக்கு மண்ணிப்பு இருக்க கூடாது என்பது பொது கருத்து இது மிகப்பெரிய மனித படுகொலை ஈஸ்டர் தாக்குதல் போன்ற விடயங்களை தழிழ் தரப்புக்கள் இளைஞர்கள் தான் செய்ததாக ஒரு மாயை காண்பிக்கப்படுகிறது.
இதன் மூலமாக ஆட்சியமைத்து ஆட்சிக்கு வந்த கோத்தபாய போன்றோர் மஹிந்த குடும்பத்தின் மீதோ எந்த பாச்சலையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. இலங்கையுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்களுக்கானது அந்த வட்டி வீதம் அனைவரையும் பாதிக்கும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாட்டினுடை பொருளாதார கொள்கை வளர வேண்டுமானால் ஏனைய வளர்ந்த நாடுகள் அவர்களுக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும் இருக்கின்ற அரசு வாழுகின்ற மக்களின் உரிமைகளை அவர்களுடைய பொருளாதார கொள்கைகளை சரியான முறையில் புரிந்து கொண்டு அரசியல் தீர்வினை கொண்டு செல்ல வேண்டும் என்றார்
இதையும் படிக்க –