நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டிய வருமானம்! இலங்கைச் சுங்கத் திணைக்களம் படைத்த புதிய சாதனை!

செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது.

இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை நேற்றைய (23) நிலவரப்படி அடைந்துள்ளதுடன், 199,348 மில்லியன் ரூபாய் வருவாயைச் சேகரித்துள்ளது.

இவ்வருடத்திற்காக இலங்கை சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த வருவாய் இலக்கு 2,206.995 பில்லியன் ரூபாயாகும்.

நேற்றைய நிலவரப்படி, சுங்க திணைக்களம் 2,058.033 பில்லியன் ரூபாய் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இலங்கை சுங்க திணைக்களம் தனது வருவாய் இலக்குகளை விஞ்சி 2,557.535 பில்லியன் ரூபாய் உயர் வருவாயைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!