உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் நைஜீரியா முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

வாழ்க்கைத் தரம் மோசமான நாடுகளின் வரிசையில் நைஜீரியா பூச்சிய புள்ளிகளுடன் முதலிடத்தையும் 61 புள்ளிகளுடன் இலங்கை இரண்டாம் இடத்தையும் 73 புள்ளிகளுடன் பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

கொள்வனவு இயலுமை, வீடுகளை பெற்றுக்காள்ளக்கூடிய நிலைமை, வாழ்க்கச் செலவு, பாதுகாப்பு, சுகாதார, போக்குவரத்து நேரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த வாழ்க்கைத் தர சுட்டி கணிக்கப்பட்டு தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் லக்ஸ்சம்பேர்க் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!