யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கபட உள்ளது.
இந்தநிலையில் செம்மணி இனப்படுகொலைக்கு சர்வதேசத்தை நோக்கி நீதி வேண்டும் என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று அவுஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவில் எதிர்வரும் திங்கட்கிழமை பகல் 12.00 மணிக்கு இடம்பெற உள்ளது.
அவுஸ்ரேலிய தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஐக்கியநாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்பாகவும் மற்றும் ஏனைய தூதரங்களை நோக்கியும் இடம்பெற உள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தமிழ்தேசிய பற்றுக்கொண்ட அனைத்து மக்களையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம் என ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை அறிய⬇️⬇️⬇️⬇️
