காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் (Submarine) தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படையினரின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இது நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
