பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிறப்பித்த உத்தரவிற்கமைய, சந்தேகநபரான சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!