உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் துறையின் தலைவராகப் பணியாற்றவில்லை எனவும் சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

சுரேஷ் சலே 2016 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறியதுடன், மீண்டும் 2018 டிசம்பர் மாதத்திலேயே நாட்டிற்குத் திரும்பினார்.

அத்தோடு 2019 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், அவர் இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படைகளின் பதவி நிலை கல்லூரியில் (Defence Services Staff College) இராணுவப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே சுரேஷ் சலே மீண்டும் இலங்கை திரும்பினார். அதன் பின்னரே அவர் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று முடிந்த பின்னரே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதை சட்டத்தரணி சஞ்ஜீவ சமரவிக்ரம இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

sajith premadasa
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்?அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்!
Commander Buddhika Sampath
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: நிராகரித்தது கடற்படை!
iran war ship
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்?
jaffna news
யாழில் காணாமல் போன மீனவர்கள் - கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எழுந்துள்ள குற்றச்சாட்டு!
gold price
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!
iran ship
விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு