🔴 VIDEO ஜனாதிபதியின் விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை கலைத்த பொலிஸாரால் பதற்றம்

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வருகைதந்தார்.

இதன்போது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.

பொலிஸார், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தகாத வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளியுள்ளனர்.

இதேவேளை கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தார்.

கடந்த காலங்களில் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசிய அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் பொலிஸார் கடந்த காலங்களை போன்று மூர்க்கத்தனமாக செயற்பட்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
school boy death
தலைநகரில் பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!
jaffna
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு!
northern province
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
power cut
மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?
airport
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!