தாஜுதீன் படுகொலையில் புதிய திருப்பம்: ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின!

றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த வாகனங்கள் மேலும் பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் ஊடாக ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்காக இந்த 3 கெப் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

WP PD 79–, WP PD 80–, WP GB 05– இலக்கங்களைக் கொண்ட இந்த 3 கெப் வாகனங்களும் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய 3 வாகனங்களுக்கும் உரிய இயக்கப் பதிவேடுகள் இல்லாமை, மற்றும் இயக்கப் பதிவேடுகள் முறையற்றவையாக இருத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் காணப்பட்டன.

இந்த வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் போது, அவைகள் வேறு குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல தரப்பினரால் அவை பயன்பாட்டில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வசிம் தாஜுதீன் கொல்லப்பட்ட 2012ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவில் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த WP LV 05–, WP PD 13–, WP KA 98–, WP KD 01–, WP PA 72– ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைப் பிரிவினர் விரிவான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன், இந்த வாகனங்களின் இயக்கப் பதிவேடுகளிலும் பாரிய பிரச்சினைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!