யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்!

யாழில் 3 வயது குழந்தையை அடித்ததுடன் அதனால் ஏற்பட்ட காயத்தின் மீது மிளகாய் தூள் பூசி சித்திரவதை செய்ததாக கூறப்படும் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு குழந்தையை சித்திரவதை செய்தவர் அந்தக் குழந்தையின் தாயின் இரண்டாவது கணவர் என்று கூறப்படுகிறது.

அவருடன் இணைந்து தாயும் குழந்தையை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்களின் தாக்குதலில் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன.

அந்தக் காயங்களின் மீது மிளகாய் தூள் இட்டதுடன் குழந்தைக்கு பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து கிராம சேவகர், பிரதேச செயலக சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்கு சென்ற நிலையில் கணவனும் மனைவியும் அந்த பிள்ளையையும் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

பிள்ளையை அவர்களிடமிருந்து மீட்டு, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!