காத்தான்குடியில் வேலைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று(30.01.2026) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், தனது காரியாலய பணிக்காக ஏழைக்குடும்பத்திலுள்ள 24 வயதுடைய யுவதி ஒருவரை கடந்த 2023 தொடக்கம் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இவ்வாறு வேலைக்கு அமர்த்திய யுவதிக்கு வார சம்பளமாக 3 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், யுவதி தனிமையில் இருக்கும் போது சட்டத்தரணி, அடிக்கடி பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.

அதற்கு குறித்த பெண் இடமளிக்காத வேளையில், உணவில் மயக்கம் மருந்து கலந்து கொண்டு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர், யுவதிக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், யுவதிக்கு திருமணமாகி, ஒரு வாரத்தின் பின்னர், மருத்துவ பரிசோதனையில் அவர், 12 வாரங்கள் கொண்ட மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.

சட்டதரணி செய்த வன்கொடுமை தொடர்பாக தேசிய சிறுவர்கள் பெண்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்ததை அடுத்து, யுவதியை பிரதே செயலக சேவை நடும் மகளீர் பிரிவினர் பாதுகாப்பான இல்லத்தில் தங்கவைத்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், நேற்றுமுன்தினம், (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி க்கு எதிராக பலாத்கார கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, நேற்றைய தினம்(30) வழக்கு விசாரணை விண்ணப்பங்களை முன்வைத்து நிலையில், இரவு 7.30 மணி வரை வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நீதவான், அவரை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicle
இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : வெளியான அறிவிப்பு
jaffna
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான சிலைகள் திருட்டு!
father attack
கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
bus accident
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - 80 உயிர்களைக் காத்த சாரதி
mullaitivu
புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞனின் தொலைபேசி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
flight
மத்திய கிழக்கில் பதற்றம்: சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்