சுதந்திர தின நாளில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicle
இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : வெளியான அறிவிப்பு
jaffna
யாழ். ஆலயம் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான சிலைகள் திருட்டு!
father attack
கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
bus accident
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - 80 உயிர்களைக் காத்த சாரதி
mullaitivu
புதுக்குடியிருப்பில் மாயமான இளைஞனின் தொலைபேசி மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
flight
மத்திய கிழக்கில் பதற்றம்: சில வானூர்தி சேவைகள் நிறுத்தம்