மனைவியின் தலையை துண்டித்த கணவன்: அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்

காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக கணவர் இந்தக் கொலையைச் செய்ததாகவும், தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, குறித்த பெண்ணுடன் தகாத தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளால்

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபர், இன்று வெள்ளிக்கிழமை உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!