யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மேல் ‘ட்ரோன்’ பறந்ததால் பரபரப்பு: இயக்கியவர் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலால் ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று(13.07.2026) 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ‘ட்ரோன்’ ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது.

‘ட்ரோனை’ அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ‘ட்ரோன்’ அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!