சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை இரகசியமாக அளவீடு செய்த கடற்படை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தனது இல்லத்தில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/ ன435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள்,மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுடைய சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்.

சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக காணப்படுகிறது. அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது.  மக்கள் காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவீகரிப்பதற்காக கடற்படை முயற்சிக்கின்றது.

அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன.

இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமாட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படாமல் அளவீடு முன்னெடுக்கப்பட்டது.

ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மீனவ சங்கம், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள்.

காலப்போக்கில் இந்த பகுதியில் கடல் தொழில் செய்கின்ற மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகின்றது.சுண்டிக்குள பகுதியில் கடற் படையின் தளங்கள் விஸ்தரிக்கப்பட போகின்றது.

மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்யப் போவதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!