🔴 VIDEO மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதயால் ஆரம்பித்து வைப்பு!

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார்.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாண்புமிகு ஜனாதிபதி ஆகியோரின் உரைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு