🔴 VIDEO சற்றுமுன் பாடசாலை வேனும், டிப்பரும் மோதி விபத்து – இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். 

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் விபத்து குறித்து பின்வருமாறு கருத்து தெரிவித்தார். 

நான் முச்சக்கரவண்டியில் இருந்த போது வேனும் டிப்பரும் மோதியதை பார்த்தேன்.7 அல்லது 8 பாடசாலை மாணவர்கள் அதில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினோம். வேனின் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டனர். காயமடைந்தவர்களை எங்களால் முடிந்த அளவு வாகனங்களில் ஏற்றினோம். ஒரு பிள்ளை மாத்திரம் நல்ல நிலையில் இருந்தது.” என்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு