டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,222 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் இந்தியாவில் இருந்து 10,453 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது 21.0% ஆகும்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 5,420 பேரும், ஜெர்மனியில் இருந்து 4,822 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 3,823 பேரும், சீனாவில் இருந்து 2,627 பேரும் மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் 2,594 பேரும் டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,153,815 ஆகும்.
அவர்களில் 485,249 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தும், 164,013 பேர் ரஷ்யாவில் இருந்தும் மற்றும் 195,565 பேர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது
