அலற வைத்த நிலநடுக்கத்தால் ஜப்பானை தாக்கிய சுனாமி: பாபா வங்காவின் கணிப்பு பலித்தது?

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றின் விளைவாக, சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கிய நிலையில், புதிய பாபா வங்காவின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை 8.25 மணியளவில் ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை பயங்கர நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி உருவாக, சுனாமி அலைகள் ஜப்பானின் Hokkaido தீவைத் தாக்கின.

ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அவசர எச்சரிக்கைகள் விடுக்க, நாடு முழுவதும் சைரன் ஒலித்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்கள்.

இதற்கிடையில், ஜப்பானின் புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி ((Ryo Tatsuki)யின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

1999ஆம் ஆண்டு தான் எழுதிய ’The Future I Saw’ என்னும் புத்தகத்தில், ஜூலை மாதம் 5ஆம் திகதி தெற்கு ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என குறிப்பிட்டிருந்தார் ரியோ.

2011ஆம் ஆண்டு ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கும் என ரியோ கணிக்க, அதேபோல் ஒரு நிலநடுக்கம் 2011ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது.

ஆகவே, ஜூலை மாதம் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கவிருப்பதாக ரியோ கணித்ததால், ஜப்பானுக்கு சுற்றுலா வர முன்பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரியோ குறிப்பிட்ட 5ஆம் திகதி பெரிய அளவில் நிலநடுக்கமும் ஏற்படவில்லை என்றாலும், அவர் சொன்னதுபோலவே சுனாமி ஏற்பட்டுவிட்டதே என பலரும் வியக்கிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!