ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை

வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஆமோரி மற்றும் ஹொக்காய்டோ பிராந்தியங்களின் அருகே கடலில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் சுமார் மூன்று மீற்றர் (சுமார் 10 அடி) உயரம் வரையிலான ராட்சத அலைகள் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ஆமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு ஜப்பான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை