யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை இருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , 12 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதை வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்

அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!