சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை!

கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்று வரும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள திறன்விருத்தி நிலையத்தில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அங்கு இரு சாராருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்தில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டதோடு, விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி கடும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்