உயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: கோட்டாபய ஆட்சியில் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரின் மகளொருவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு தரப்பினருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின்போது, ஷங்ரிலா விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் குண்டுதாரியுடைய மாமனார் அலாவுதீன் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் அலாவுதினீன் மகளொருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவராகவும், அவருக்காக நேரடியாக நிதி செலவிட்டவராகவும் அறியப்படுகின்றார்.

அதேசமயம், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்த விடயங்கள் அனைத்தும் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு மக்களுக்கு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, ராஜபக்சர்களுடன் இருப்பது பாதாள உலகக் குழுவுடன் இருப்பதற்கு சமமான ஒன்றாகும்.

அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் தங்களது சொந்த அரசியலை இழந்து அவர்களின் அடிவருடிகளாக மாறியுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்துடன் இருந்தவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக் கூற முடியாது. ஆனால் ஒருவர் குற்றம் செய்திருந்தால் அவர் எந்த அரசியல் குடும்பத்துடன் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!