வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளை நடத்தக் கோரிக்கை!

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260 ஏக்கர் பிரதேசம் தொல் பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா மாவட்டத்தின் சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை எதிர்வரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பகுதியானது அநுராதபுர காலத்தைச் சேர்ந்த பண்டைய பௌத்த வளாகத்தின் இடிபாடுகளைக் கொண்ட வரலாற்று நிலமாகும் என்றும், இது வவுனியா நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தொலையில் உள்ள சமளங்குளம ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970களில் நடத்தப்பட்ட தொல் பொருள் ஆய்வின்படி, இந்த இடம் மத்திய அநுராதபுர காலத்தைச் சேர்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளதோடு இயற்கையான கருங்கல் குளத்தின் மீது ஒரு சிலை மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட பண்டைய தங்குமிடம் ஆகியவை உள்ளிட்ட பல சன்றுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்தப் பகுதியின் கீழ் அமைப்பு எட்டு பக்கங்கள் மற்றும் ஆறு பக்கங்கள், வடிவங்களில் ஒரு சதுர மேடையில் கட்டப்பட்டிருப்பது தனித்துவமான அம்சமாகும் என்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியின் போது, வெண்கலத்தால் செய்யப்பட்ட அவலோகிதேஸ்வர போதிசத்துவர்
சிலையும், அந்த சிலைக்குள் புத்த சிலையின் பகுதியும் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பண்டைய தொல்பொருள் நிலத்தில் தற்போது ‘சமளங்குளம் பிள்ளையார் கோவில்’ என்ற பெயரில் நவீன இந்து கோயில் கட்டப்பட்டு வருவதால் பெரும்பாலான பௌத்த இடிபாடுகள் நீரில் அழிக்கப்படும்
அபாயத்தில் இருப்பதால் அப்பகுதியில் பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வெடுக்குநாறி மலையை மையப்படுத்தி 260 ஏக்கர் பகுதி தொல்பொருளியல் திணைக்களத்துக்கு சொந்தமாக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அதன் முதற்கட்டத்தில் 51 ஏக்கர்கள் நில அளவை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!