பூங்கோதை என எழுத்துலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் கலா ஶ்ரீரஞ்ன் லண்டனில் காலமாகிவிட்டார்…
என் அன்புக்கு பாத்திரமான கலா அக்காவின் இழப்பை கண்ணீரோடே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வளவு விரைவாக நெருங்கமுடியாத தூரத்திற்கான அவர் பயணம், அவரின் பிரியமான எங்களுக்கு தாங்கொண்ணா வலியையும் வேதனையையும் தருகின்றது.
புன்னகை பூக்களால் மற்றவர்களின் இதயங்களை நிரப்பத் தெரிந்நதவர் கலா அக்கா
இருக்கும் இடத்தை மகிழ்ச்சியால் உயிர்ப்பிக்கும் சூட்சும்ம் அறிந்தவர உலகின் அற்புதங்களை ரசிக்கவும் அதில் லயிக்கவும் தெரிந்தவர்
கலா அக்கா வாழ்ந்த காலங்கள் குறுகியதாக இருந்தாலும் அவரின் ஆன்மா முழுமையாக விழித்தே இருந்தது
காலன் தன்னை நோக்கி வருகிறான் என அறிந்தோ என்னவொ ஒவ்வொரு கணமும் செயல் ஊக்கத்தோடே நடமாடினார்..
ஒக்டோபர் 28 நள்ளிரவு 1.00 மணிக்கு chat இல் என்னோடு நீண்ட நேரம் இணைந்து கொண்ட போதெல்லாம். மீண்டும் வருவார் என்றே நினைத்திருந்தேன்..
தன் வலியும் வேதனையும் கடந்து எங்களுக்கு வாழ்தலின் அர்த்தத்தை உணர்த்தி
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்…
அன்பாலும் அக்கறையாலும் அழகிய சிந்தனையாலும் எங்களோடு அவர் கலந்திருந்த காலங்களை நெஞ்சிருத்தி கண்ணீரோடு விடை கொடுக்கிறேன்..
கலா அக்காவின் ஆன்மா சாந்தி கொள்வதாக


