யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் 20 வயதுடைய, ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.